Monday, April 2, 2018

அம்புகள்




ஜெ,

வெண்முரசு இமைக்கணம் 8 கீதை சாங்கிய யோகத்தின் விளக்கமாகவும் இன்னொருவகையில் தொடர்ச்சியாகவும் அமைந்துள்ளது
களம்கொண்டு செல்லும் அம்புகள் முற்றொழியாமல் பாசறை திரும்புபவர்களுக்கு போர் முடிவதேயில்லை


என்ற வரியைக்கொண்டு சாங்கிய யோகத்தில் கிருஷ்ணன் விடுக்கும் அந்த அறைகூவலையே புரிந்துகொள்ளலாம் என்று நினைத்துக்கொள்கிறேன். சுந்தர ராமசாமியின் கவிதை ஞாபகத்திற்கு வருகிறது.



வருத்தம்


வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்
ஆயுளின் கடைசித் தேடல் இப்போது
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை
பின்னும் உயிர்வாழும் கானல்


லட்சுமணன்