Wednesday, April 4, 2018

வம்சப்பட்டியல்கள்




ஜெ


வம்சப்பட்டியலைப்பற்றி ஒருவர் எழுதியிருந்தார். வம்சங்களின் பட்டியல் எனக்கும் ஆரம்பத்தில் ஒருமாதிரி தோன்றியது. ஸ்கிப் செய்துவிடுவேன். பிறகு தோன்றியது இது கிளாஸிக். அதற்குரிய ஒரு சாவகாசமான வடிவம் உள்ளது. ஆகவே இதை நாம் இப்படிப்பார்க்கவேண்டியதில்லை என்று. எல்லாமே இதன் பகுதிகள் தான். ஒரு பெரிய கோயிலைப்பார்ப்பதுபோல பார்க்கலாம். மடைப்பள்ளியில் சிற்பங்கள் இருக்காதுதானே?

இப்படி பல பகுதிகள் வெண்முரசிலே உள்ளன. ஆனால் அவையெல்லாம் ஒட்டுமொத்தமாக ஒரு சித்திரத்தை அளிக்கின்றன என நினைத்துக்கொள்கிறேன். முழுசாக நினைக்கும்போது எல்லாவற்றுக்கும் ஒரு ஒழுங்கு உள்ளது. உதாரணமாக ஏன் மீண்டும் மீண்டும் சபை வர்னனை வருகிறது? கிருஷ்ணன் தூதுசெல்லும் மூன்றுசபைகளும் வெவ்வேறு கோணத்திலே வர்னனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நாவல் முடிந்தபிறகு அந்த மூன்றுசபைகளும் காட்சியாக மனதிலே நின்றன. அப்போதுதான் அந்த வர்ணனையின் அவசியம் தெரிந்தது

எஸ்.பாபு