அழிக்கப்படுகையில், கைவிடப்படுகையில், சிறுமைகொள்கையில் பிறிதொன்றை நோக்கி உதவிகோருபவன் தன்னை அறியாதவன். அழைக்கப்படாத தெய்வமொன்று இருண்ட ஆலயத்தில் துயருடன் அவனுக்காக காத்திருக்கிறது.
கீதையை மிகப்பெரிய தன்னம்பிக்கை நூல் என்பார்கள். கீதையை உதிரிவரிகளாக அல்லது வயசான காலத்தில் உட்கார்ந்து கேட்கும் ஒரு மோட்ச சாதனமாகவே நாமெல்லாம் அறிந்திருக்கிறோம். நரம்புகளில் உறுதியிருக்கும் இளவயதில் கேட்கவேண்டிய நூல் கீதை என்று விவேகானந்தர் சொல்கிறார்
உலகத்தில் துன்பப்படுபவர்களுக்கு இது அளிக்கும் சொல் இதுதான். தெய்வத்தை அல்ல தன்னை நம்பு என்று சொல்கிறது கீதை. போர்புரிக என்று அது சொல்வது ஒடுக்கப்பட்டவர்களுக்கும்தான்
சரவணன்