Saturday, April 7, 2018

கேள்விகள்




சுலபை பீஷ்மரின் பொருட்டு கேட்கும் கேள்விகள் இவை . எல்லாமே அறிவியலில் பணியாற்றும் எனக்கு அடிக்கடி எழும் கேள்வி.]

செயல் செய்யச்செய்ய பெருகும். அறியும் செயலுக்கு ஏற்ப அறிவு மாறு. அப்படியென்றால் செயலால் என்னபயன்? [அறிபவனுக்கேற்ப தன்னை காட்டும் இப்புடவியை அவ்வண்ணம் முடிவிலாது அறிவதனால் என்ன பயன்?]

அறிபவனும் நிலையறறவன் அறிபொருளும் நிலையற்றது என்றால் அறிவு என்று நிலையாக ஏதேனும் உண்டா? [அலையில் ஆடும் தோணியில் நிற்பவன் நிலையாக எதைப் பார்த்திருக்கமுடியும்?]

காமகுரோதமோகம் கொள்ளாத மனமே இல்லை. அந்த மனதில் எப்படி தூய உண்மை உருவாக முடியும்?  [புயல்கொந்தளிக்கும் மரக்கிளையில் எப்பறவை வந்தமரும்?]

நாம் காணும் உண்மைகள் எல்லாமே நம்மில் தெரியும் துளிகள். நிலையற்றவை [குமிழியில் நகரம்]

நாம் ஓர் உண்மையை அது திகழும் ஒரு material reality யைத் தவிர்த்து அறியவே முடியாது. அப்படியென்றால் அதற்கு ஏன் முயற்சி செய்யவேண்டும்? [கலத்தில் பால்]

நாம் அறியும் உலகை நம் செயல்மூலம் நாமே கலைத்துக்கொண்டும் இருக்கிறோம் [மீன் வாலால் குட்டையை கலக்குவது போல]

இந்தக்கேள்விகள் எல்லாமே எனக்கும் உரியவை. இன்றைய அறிவுத்துறையில் உள்ளவை Sorry to say, பதில்கள் எனக்கு இன்னும் convince ஆகவில்லை.  ஒரு absolutist statements ஆகவே உள்ளன.

மாதவ்