Saturday, April 7, 2018

பொருள்




ஜெ

தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும் செறிவான definitions ஆலான இந்த நாவல் வெண்முரசு வரிசையில் புதிது. ஆகவே கொஞ்சம் திணறவேண்டியிருக்கிறது

பொருளென்று அங்கிருந்தும் அறிவென்று இங்கிருந்தும் சந்திக்கும் புள்ளியிலேயே அனைத்தும் நிலைகொள்கின்றன. நிகர்விசைகொண்ட இரு களிறுகளால் இழுக்கப்படும் வடத்தின் மையம் அது

என்றவரியை மட்டும் தனியாக வாசித்தேன். கருத்துமுதல்வாதத்திற்கும் பொருள்முதல்வாதத்திற்கும் நடுவே ஒரு புள்ளி. இருகளிறுகளால் இழுக்கப்படும் வடத்தின் மையம் என்ற வரி மேலும் அதைவிளக்கியது.

அறியப்படும் இவையனைத்தும் அறிவென்பதனால் அறியப்படுவதனால் அறிவு உருவாகவில்லை என்றே பொருள்
என்ற வரி அதேபோல. அறியப்படுவதற்கேற்ப அறிவு இருப்பதனால் அறிவு என்பது ஒரு தொழில் மட்டுமே என சுலபை சொல்கிறாள். அறியப்படுவன அனைத்துமே அறிவு என்னும் ஒரேவடிவில் உள்ளன என்பதனால் அறிதலால் அறிவு உருவாகவில்லை. அதற்கு முன்னரே அது அங்கே உள்ளது என்கிறார் ஜனகர்.

எங்காவது அமர்ந்து வரிவரியாக வாசித்து விவாதிக்கவேண்டிய இடம் இது


முரளி ஆர்