இனிய ஜெயம்
நீலன் பீஷ்மர் சந்திப்பை இரண்டாம் முறை வாசித்த பின்னும் பல விஷயங்களில் இன்னும் பிடி கிடைக்கவில்லை [சரி கதவு திறக்கும் போது திறக்கட்டும் என விட்டு விட்டேன் ] ஆனால் புதிதாக ஒரு பிடி கிடைத்தது .அது இங்கே நீலனால் உரைக்கப்படும் கீதை பிறருக்கு என்றாலும் ,அந்த பிறர் வடிவெடுத்து வந்திருக்கும் யமனுக்கே என்பது முதன்மையானது .
ராமனின் உயிர் முதல் பூரி சிரவரஸ் , துரோணர் ,கர்ணன் ,துரியோதனன் என அத்தனை ஆளுமைகளின் உயிரையும் யுத்த விதிக்கு முரண் எனும் அறப்பிழை வழியேதான் நமன் கவர்கிறான் .
நிகழ்த்திய பிழை மட்டுமல்ல நிகழ்த்தப்போகும் பிழைக்கும் சேர்த்தேதான் நமனுக்கு இங்கே கீதை உரைக்கப்படுகிறது இல்லையா : )
கடலூர் சீனு