அன்புள்ள ஜெ
பெயர்ப்பட்டியல்களைப்
பற்றி ஒரு சுவாரசியமான விவாதம் வெண்முரசு தளத்திலே ஓடியது. நல்ல விவாதம் என தோன்றியது.
அதில் ஒரு வாசகர் கோஷமிடுவதைப்பற்றி எழுதியிருந்தார். திரும்பத்திரும்ப மக்கள் கோஷமிடுவது
வந்தபடியே இருக்கிறது என்று எழுதியிருந்தார்.
கோஷமிடுவதை ஒரு
வரலாற்றுத்தரிசனமாகவே காட்டும் அருமையான ஒரு பகுதி வெய்யோனில் உள்ளது. வெய்யோன் வெண்முரசுநாவல்களில்
போதுமான அளவுக்குக் கவனிக்கப்படாமல் போன பல பகுதிகள் கொண்டது
இந்தப்பகுதியை
முழு அத்தியாயத்தையும் வாசித்துப்பார்க்கலாம்
ஆர். ராகவேந்திரன்