ஜெ
சாங்கிய யோகத்தின் நடைமுறை சார்ந்த
அறைகூவல் போல ஒலிக்கின்றன இந்த வரிகள். கீதை எளியவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும்
என்ன சொல்கிறது என்று கேட்டால் இதைத்தான். கடமையைச்செய் பயனை எதிர்பாராதே என அது ஏழைகளிடம்
சொல்கிறது என்று வைதிகர்களும் மறுபக்கம் நாத்திகர்களும் ஒருபோல பிரச்சாரம் செய்கிறார்கள்.
இந்த அறைகூவலை அவர்களிடம் எடுத்துச்செல்லவேண்டும். விவேகானந்தர் கீதையின் சாராம்சமாகச்
சொல்வது இதைத்தான்.
ராம்