Sunday, April 1, 2018

கர்ணனின் வாழ்க்கை



ஜெ

கர்ணனின் வாழ்க்கையின் வழியாக சரசரவென்று ஓடிமறையும் இந்த பாண்டவ வம்ச வரலாறு மகாபாரதத்தில் உள்ளது அல்ல. விஷ்ணுபுராணத்திலிருந்து எடுத்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இது ஒரு பிற்காலச்சேர்க்கை என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் இந்த வரலாற்றில் உள்ள ஒரு unavoidable bizaireness இது உண்மை என்று காட்டுகிறது என்றுதான் நான் நினைக்கிறேன். அதிலும் கடைசி அரசனின் சாவு. கர்ணன் வாழ்ந்து வாழ்ந்து சலித்துச் சலித்து அழிகிறான். வாழ்க்கையைத்தானே கேட்டாய், போதுமா என்று தெய்வம் கேட்கிறது. உண்மையில் வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை. அதை எவ்வாறு நிறைத்துக்கொள்வது என்பதில்தான் வாழ்க்கை அர்த்தம் இருக்கிறது என நினைக்கிறேன். இந்த அத்தியாயம் ஒரு தனிச்சிறுகதைபோல. ஒரு பெரிய கேன்வாஸ். சுருக்கமாக அது வந்துவிட்டதனால் அது கூர்மையாக ஆகிவிடுகிறது

மோகன்ராஜ்