Sunday, April 1, 2018

வெறுமை




அன்புள்ள ஜெ,

The futility of attaining என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லாட்சி உண்டு. அதற்குச் சிறந்த உதாரணம் இப்போது வந்துகொண்டிருக்கும் கதை. வந்ததை ஏற்காமல் விரும்பியதை ஏற்றால் என்ன ஆகும்? நன்மையையும் வெற்றியையும் மட்டும்தான் நாம் நாடுகிறோம். நமக்கு என்ன எஞ்சும் அப்படி நாம் நினைப்பதெல்லாம் நடந்தால்? கர்ணனின் வாழ்க்கை சலிப்பால் ஆனது. சலிப்பு தவிர வேறு ஒன்றுமே இல்லை. மனிதன் போராடியாகவேண்டும். ரத்தம் சிந்தியாகவேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது

அந்த வெறுமை பயமுறுத்தியது. எனக்கு 43 வயது. இப்போதே வெறுமைதான். என்னைச்சூழ்ந்திருப்பவர்களைப் பார்க்கிறேன். எல்லாருமே ஏதோ ஒன்றை அடைந்துவிட்டார்கள். செயற்கையாக கோல்களை உருவாக்கிக்கொள்ளவேண்டும். ஆனால் உள்ளுக்குள் இன்னும் ஒன்றுமில்லை என்று தெரியும். ஆகவே சலிப்பு. அதை மறைக்க குடி. பார்ட்டி. செக்ஸ். வாழ்க்கையின் அர்த்தமில்லாமையை இந்த அத்தியாயம் அற்புதமாகச் சொல்லிவிட்டது

ராகவேந்திரன்