Saturday, April 11, 2015

மகாபாரதத்தின் ஹாம்லெட்




ஜெ,

வெண்முரசில் பூரிசிரவஸின் கதாபாத்திரம் அடையும் வளர்ச்சி அல்லது விரிவு ஆச்சரியம் அளிக்கிறது. அவன் கனவுகளை மட்டுமே காண்கிறான். ஒவ்வொரு கனவிலிருந்தும் அப்படியே வெளியே போய்விடுகிறன். கோட்டைகட்ட நினைப்பவன் அதைப்பற்றிய ஒரு சிறிய எண்ணம்கூட இல்லாமல் இருக்கிறான்

இன்றையப் போரில் அவன் பங்கெடுத்துவிட்டு வந்து நின்றிருக்கும்போது துரியோதனன் கேட்கிறார் உனக்கு எந்த இளவர்சி வேண்டும் என்று. அவன் சொல்லியிருக்கலாம். சொல்லாமலிருப்பது அவனுடைய இயல்பு. அவன் வாயில் அது இல்லை. அதைவிட அவ்னுக்கு அப்படிச் சொல்லும் விதி இருக்கவில்லை பரிதாபம்தான்

எனக்கு பூரிசிரவஸ் ஹாம்லெட்டை நினைவுறுத்துகிறான். To be, or not to be: that is the question என்ற வரிதான் ஞாபகம் வந்துகொண்டே இருந்தது. முடிவெடுக்கவே முடியவில்லை. அபடி நினைவுக்கு வந்ததுமே அவன் முகமும் ஹாம்லெட் மாதிரி ஆகிவிட்டது. நல்லவெளை படங்கள் இல்லை என்று நினைத்துக்கொண்டேன்

To sleep, perchance to dream—ay, there's the rub:
For in that sleep of death what dreams may come 

என்ற வரிதான் இன்றைக்கு ஞாபகத்தில் ஓடிக்கொண்டே இருந்தது

சுந்தரம்