Friday, April 10, 2015

கேட்காதவன்



ஜெ

பூரிசிரவஸின் ஆளுமைதான் இந்த நாவலிலேயே தனித்தன்மை உடையதாக இருக்கிறது. கேட்கத்தெரியாதவ்னாகவும் ஆசைகளை வெறுமே கனவுகளாக மட்டுமே மாற்றிக்கொள்பவனகவும் அவன் இருந்துகொண்டிருக்கிறான்

இன்றைக்கு வந்த அத்தியாயத்தில் அவன் ஒரு வார்த்தைப் பேசியிருந்தால்போதும் கண்டிப்பாக துரியோதனன் அவனுக்கு தன் தங்கையைக்கொடுத்திருப்பான். ஆனால் ஏன் கேட்கவில்லை? ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவனால் கேட்கமுடியாது

நானும் தனிப்பட்டமுறையில் இப்படிப்பட்டவனாகவே இதுவரை இருந்து வருகிறேன். ஆகவேதன் இந்த நாவலில் நான் பூரிசிரவஸை முக்கியமானவனாக நினைக்கிறேன் என்று தோன்றுகிறது

இந்த உலகம் படையெடுத்துப்போகிறவர்களுக்குரியது, அதுதான் மகாபரதம் சொல்வது. இதைப்புரிந்துகொள்ள பூரிசிரவஸ் மிகவும் உதவுகிறான்

எஸ். கிருஷ்ணா