Saturday, September 19, 2015

கொடுத்தல்

JM Sir,

இந்திரநீலம் 87ல், மித்ர்விந்தைவின் கதையினைக் கூறிய சூதருக்கு, திருஷ்டத்யுன்மன் பொற்காசுகள் கொடுக்கிறான்.
அவன் கொடுக்கும் விதம், அவனது தன்மையினை வெளிப்படுத்துகிறது.

" திருஷ்டத்யும்னன் தலைவணங்கி தன் இடையிலிருந்து பொற்காசுகளை எடுத்து அவன் இடைக்குக்கீழே தாழ்த்தி நீட்டினான். அவன் நீட்டிய கைக்கு மேல் தன் கை வரும்படி அமைத்து அக்காசுகளை அவன் எடுத்துக் கொண்டான். இருவர் தலையிலும் தன் இடக்கையை வைத்து வாழ்த்தி “வீரம் விளைக! வெற்றி துணையாகுக! வென்றபின் அறம் வழிகாட்டுக!” என்று தானும் தலைவணங்கி திரும்பிச் சென்றான்."

பொற்காசுகள் கொடுத்தான் என்று கூறிச் சென்றிருக்கலாம். ஆனால் அவன் எவ்வாறு கொடுத்தான், சூதர் எவ்வாறு பெற்றுக்கொண்டான் என்று துல்லியமாக எழுதியிருந்தீர்கள்.
எளிதாக இவ்வரிகளைக் கடக்க முடியவில்லை.
கொடுப்பது என்ற செயலே ஓர் வாய்ப்பு. கொடுக்கும் பொருள், பெற்றுக்கொள்பவர் என அனைத்தும் கருவிகளே. இச்செய்கையின் மூலம் நம்மையே முன்வைக்கின்றோம்.
வெகுமதி,பரிசு, தர்மம் என அனைத்திற்க்கும் இது பொருந்தும்.
எளிய செயல்களேயாயினும், நம்முள் நிறைந்திருக்கும் தன்னகங்காரத்தை தள்ளி வைப்பதின் மூலமே இதனைச் செய்யமுடியும்.
தலைவணங்கி கொடுத்தான், தலைவணங்கி பெற்றுக்கொண்டான்.
செயலெனும் யோகம்!



அன்புடன்,
மகேஷ்.
(காங்கோ)