Monday, September 7, 2015

கர்ணனை மறந்துவிடாதீர்கள்

பரவசத்தில், அதன் அலையில்-உச்சத்தில் இருந்தபடி கண்ணனை எழுதுவது புதிதது அல்ல உங்களக்கு. அந்த மயக்கம் பலம். அது உங்களின் பெருமாள் பின்புலம். நீங்கள் அறியாத உள் ஆழம். 
 
 
துவராகையை காட்டி, அவனின் விரிவை, வாழ்வை காண வைத்தீர்கள். ஒருவனை பற்றி நேரடியாக சொல்லாமல், சுற்றி உள்ளவர்களின் வாழ்வில் ஏற்படுத்திய impact மூலம் வெளிப்படுத்தி சென்றீர்கள்... அவனுக்கென்ன??, ஊசி நுனியில் மெல்லிய பலூன் போல தொட்டபடி மிதந்து இருந்தாலும்  உடையாமல் செல்வான். நிறைந்து கிடந்தது உள் வெறுமனே இருப்பவன். ஆழ்ந்து உறங்கி காற்றில் விருட்டென மேலேறி இடது வலதும் மின்னல் என திரும்பி பறக்கும் சிறு பறவை போல.. அது அவ்விதமே கிடக்கட்டும்..

கர்ணனை மறந்து விடாதீர்கள்.பல ஆயிரம் மைல் விரிந்து கிடக்கும் காட்டில் உள்ள உயர் மலையின் உச்சியில்  தனித்து இருப்பவன் . சாபம் அல்லது ஊழ் போல ஒன்று தொடர்ந்து அல்லல் படுத்தி கொன்றாலும் வாழ்பவன்.. நட்பில் கிடைத்த மண்ணில் சும்மாவாகவா ஆட்சி செய்து இருப்பான்? அவனின் பண்புகள் மண்ணில் அவனின் மக்களில் மலர செய்யாமல் இருந்து இருப்பானா? நட்பின் வளையத்தில் இருக்கிறோம் என்று தெரிந்து இருந்தாலும் சரி தவறு உறுத்தல் இருந்தாலும், நீங்கள் சொல்லும் ஒரு அறம் பற்றி நின்று துரியன் துணை சார்ந்து இருப்பான் அல்லவா? தேங்காமல் செல்லும் ஆறு போல தன் விற்கலையில் உயரம் ஏறி இருப்பான் அல்லவா? மத்திம வயதில் அவனின் விரிவு எங்கனம் இருந்து இருக்கும்? இந்த ஒன்றரை வருடத்தில் குந்தி மரம் ஓரம் பால் ஊட்டி விட்டு ஆற்றில் மிதக்க விட்டு மூழ்கி எழுந்து பார்க்கையில் விலகி சென்றவன் பற்றி சுத்தமாக மறந்து இருப்பாளா? அவளுக்கும் வயது ஆகிறது அல்லவே? 
 
கர்ணனை மறந்து விடாதீர்கள்

அன்புடன்,
லிங்கராஜ்