Wednesday, September 9, 2015

ஓவியங்கள்

அன்பு ஜெ ,


நான் கேட்கவந்த கேள்வி கடைசியில். ஒரு சிறிய அறிமுகத்துக்கு பின்.

நான் சிவகுமார். வடசேரியை சேர்ந்தவன் . தற்பொழுது பெங்களூரில் பணி.

நான் தங்களின் "சங்க சித்திரங்கள்" கட்டுரை-ஐ கல்லூரி நாட்களில் அனந்த விகடனில் அவ்வபோது வாசித்த போதும் உங்களை கண்டடைந்தது 8 வருடங்கள் முன். எஸ்.ராவின் ஏதோ ஒரு கட்டுரை மூலமாக உங்கள் ஜெயமோகன்.இன்னுக்கு வந்து சேர்ந்தேன். பின் உங்கள் எழுத்துகளில் சரணம் அடைந்தேன்.

நான் வாசித்த தங்களின் முதல் புதினம் "காடு". முதல் நாவெல் என்பதனாலோ என்னவோ, உங்களின் "பின் தொடரும் நிழலின் குரல்" தவிர்த்து பிற புதினங்களை படித்துவிட்டாலும், இன்றும் என் மனதுக்கு நெருக்கமான நாவல் "காடு" தான். "எழாம் உலகம்" என்னை புரட்டி போட்டு தூங்கவிடாமல் செய்தது. "விஷ்னுபுரம்" என்னுக்குள் இருந்த தேடலை, என் வாழ்க்கையின் மிக பெரிய சவாலை எனக்கு அளித்தது. இன்றும் அந்த தேடலை தொடர்ந்தபடியே பயணித்து கொண்டிருக்கிறேன். ஒரு முறையே வாசித்திருக்கேன் .அதுவும் தங்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக.

BTW, இதுவரை தங்கள் வீட்டு வாசல் வரை ஆறு முறை(2012-2013) வந்துள்ளேன். ஒரு முறை வீட்டு compound wall வெளியே நின்று தங்கள் பெயர் சொல்லி அழைத்திருக்கிறேன் (may be உங்கள் வீடு பூட்டப்பட்டுள்ளது என்று அறிந்திருந்தேனோ:)).ஒவ்வருமுறையும் என் வாசிப்பனுபவம் சரிவரயில்லாமல் தங்களை disappoint செய்து விடுவேனோ என்ற ஒருவித low confidence-இல் திரும்பிவிட்டேன். உங்களின் வாசகர்களின் திறன் (standard ) என்னை அச்சுரித்தியது என்று நினைக்கிறேன். 2013-இல் ஒரு பெரிய பைக் விபத்தில் கால் வாசி முன் மண்டை கபாலத்தை இழந்து, உயிர் பிழைத்தும், ஒரு வித விரக்தியில்  (I am bit look conscious:)) இருந்தபோது தங்களின் புறப்பாடு நூலை வாசித்து depression-இல் இருந்து வெளி வந்தேன். இன்று தங்களின் வென்முரசு நாவல் பிரயாகை வரை வாசித்திருந்தாலும் எவ்வளவு deep-க வாசித்திருக்கிறேன் என்று தெரியவில்லை. இன்னும் படித்ததை தொகுத்து note  செய்யும் பழக்கம் இல்லை . May be, that would help me to know better.

தங்களுக்கு நான் எழுதும் இரண்டாம் கடிதம் (First one was a one liner). Again, தங்களுக்கு வரும் பிற வாசக கடிதங்களின் standard-ஐ நான் meet செய்ய முடியாது என்ற ஒரு பயத்தினால். இன்று ஏதோ ஒரு மனதைரியத்தில் எழுதிவிட்டேன்.


இப்பொழுது கேள்விக்கு. நான் இதுவரை வென்முரசு நாவலின் பிரயாகை வரை அனைத்து நாவலும் செம்பதிப்பாக வாங்கியுள்ளேன். அனைத்திலும் ஓவியம் இடம்பெற்றிருப்பது இன்னும் சிறப்பாகவே இருந்தது. அப்படி இருக்க ஏன் "வெண்முகில் நகரம்" செம்பதிப்பில் ஓவியம் இடம்பெறவில்லை? வேறு ஒரு செம்பதிப்பில் ஓவியம் இடம்பெற வாய்ப்பு உள்ளதா?

அன்புடன்,
சிவகுமார் 


அன்புள்ள சிவக்குமார்,

நீங்கள் தயக்கமில்லாமல் நேரில் சந்தித்திருக்கலாம். பிரச்சினை ஏதும் இல்லை. பரவாயில்லை மறுமுறை வரும்போது சந்திப்போம்.

தோற்றம் பற்றிய பிரக்ஞை முக்கியமானதுதான், அதை இல்லை எனச் சொல்லவில்லை. ஆனால் மிகவிரையில் இளமை கடந்துபோகும். அதன்பின் அது ஒரு பிரச்ச்னை அல்ல. நம்ம உளப்பூர்வமாக எதிலெல்லாம் ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறோம் என்பது மட்டும்தான் பிரச்சினை. கலையும் இலக்கியமும் சிந்தனைகளும் நம்மை நம் உடல் அல்ல உளம் என காட்டுகின்றன. அவை அளிக்கும் தன்னம்பிக்கையே இறுதிவரை தொடர்வது. கொஞ்சம் ஆணவமாகக்கூட அது மாறும். அதுவும் நல்லதே

தினம் ஓர் ஓவியம் என்பது எளிய செயல் அல்ல. ஷண்முகவேல் வேலையில்லாது இருந்தபோது அதைச்செய்ய முடிந்தது. அதுவே பெரிய கொடை. இப்போது செய்யமுடியும்நிலையில் இல்லை. ஊதியம் அளித்து செய்யவைக்க பெரிய நிறுவனங்களால் மட்டுமே முடியும்


ஜெ