Sunday, September 20, 2015

சிறுவன்

அன்புள்ள ஜெயமோகன்

முதல் அத்தியாயத்தில் சிந்துபாத் கழுகுகள் என்று ஆரம்பித்ததும் அய்யய்யோ இது தினத்தந்தி கன்னித்தீவு போல இருக்கிறதே, கற்பனை மிகுபுனைவு என்றால் இது டூ மச்சாக இருக்கிறதே என்று பயந்துவிட்டேன். ஆனால் அது சுஜயன் கனவு என்று பிரமாதமாக கொண்டுவந்துவிட்டீர்கள். சுஜயனை அப்படியே மடியில் வைத்துக் கொஞ்ச வேண்டும் போலிருக்கிறது. மேலும் அத்தியாயங்களைப் படிக்க படிக்க

குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுந் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்

என்ற வரிகளை பக்கம் பக்கமாக விரித்துப் படித்தது போல உணர்ந்தேன். அர்ஜுனன் வந்தாலென்ன, போனாலென்ன!

இப்போதெல்லாம் வெண்முரசை வாராவாரம் சேர்த்துப் படிப்பது என்று ஒரு பழக்கம். சுஜயனைப் படிக்க அத்தனை நேரம் காத்திருக்க முடியாது! தினம் தினம் படித்தாக வேண்டும்...

அன்புடன்
ஆர்வி
 
ஆர்வி
 
அன்றுமின்றும் அர்ஜுனன் படுக்கையை நனைக்கும் பையன்களுக்குரிய நாயகன் அல்லவா?
 
நானும் அப்படித்தான் இருந்தேன்
 
ஜெ