Tuesday, August 12, 2014

அதிரதன்

ஜெ

இதுவரை வந்த கதாபாத்திரங்களிலே அதிரதனை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வெண்முரசிலே பெரும்பாலான கதாபாத்திரங்கள் அறிவும் உணர்வும் கொண்டவர்கள். கூர்மையாக யோசிக்கிறார்கள். ஆனால் அதிரதன் சாதாணமானவர். அவருக்கு எந்த வகையான அறிவு ஆழமும் கிடையாது. எளிமையான சூதராக இருக்கிறார். அவர் வரலாற்றில் இருந்துகொண்டிருக்கையில் ஒரு அழகு கைகூடுகிறது. ராதை சொன்னதுபோல அவர் பெயரும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வரலாற்றில் இருக்கிறதே.

ஆனால் அவர் முட்டாள் இல்லை. அவரது தொழிலை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார். மனிதர்களின் அதிகார ஆணவத்தையும் நுணுக்கமாக புரிந்து வைத்திருக்கிறார். குதிரைகளைப்பற்றியும் யஜமானர்களைப்பற்றியும் அவர் சொல்லும் இடங்கள் சிறப்பு. அவரது உலகம் அவ்வளவுதானே?

சிவராம்


அன்புள்ள சிவராம்,

அதிரதர் மாதிரி பலர் இருந்தார்கள். அம்பாலிகையே சாமானியப்பெண் தானே? சிவை?

ஆனால் ஒரு காவியநாவலில் காவியத்தன்மை அற்றவர்களுக்கு அதிகம் பேச உரிமை இல்லை. அதில் ஒவ்வொரு சொல்லும் முக்கியம் அல்லவா?
ஜெ