Thursday, August 21, 2014

கண்ணனும் இசையும்

சமீபத்தில் படித்த 'பாரீசுக்கு போ'-வின் காரனமோ தெரியவில்லை கொஞ்சம் நம் கர்நாடக சங்கீதம் கேட்போம் என்று கேட்டுகொன்டே வந்தேன். சாக்ஸாபொனில் இந்த பாடலை கேட்டதில்லை கெட்போம் என்று கீழேஉள்ள சுட்டியில் கேட்க அரம்பித்த தருனத்தில் தேதி 20 என்று நியாபகம் வரவே வென்முரசுக்கு வந்தேன்.

http://my.usapoki.com/data/16424/Tamboori_Meetidava-Kadri_Gopalnath%5Bwww.Mp3MaD.Com%5D.mp3

எப்போழுதும் முற்றான அமைதி சூழலில் தான் வென்முரசு படிப்பேன். ஆனால்  'நீலம் – 1 திருப்பல்லாண்டு' வந்து அடந்தபோழுது எனக்கு இந்த இசையை நிருத்த என்னமில்லை.

தொராயமாக படித்து முடிக்கவும் இசையும் முடிந்தது. கொஞ்சம் dramatic-ஆக இருந்தாலும் இது நடந்தது. அப்பா, என்ன அனுபவம்.

பிறகு தனியாக படித்தும் - தனியாக இந்த இசையை கேட்டும் பார்த்துவிட்டேன். a thing of beauty is a joy forever. இதுவே பொதும் அதை கெடுக்க வேண்டாம் - விட்டு விட்டேன்.

ஆனால் என்ஞினியர் படித்த என் மூளை சும்மா இல்லாமல் இந்த கடிதம் அனுப்ப தூன்டியது.

இப்பொழுது எவ்வளவு சீராகவும் செம்மையாகவும் ஷன்முகவேல் அவர்களிம் ஒவியமும் வந்து அமர்கிரது - அது பொல எல்லா இடங்களிலும் வேன்டாம், கங்கையில் படகோட்டியின் பாடல் போன்ற அரிதான இடங்களில் - அந்த இடம் வரும்பொது சில வரிகளோ அல்லது இதை போன்ற அனுபவம் தரும் இசையோ ஒரு அழகான கோர்வை  தானே. பாரதி தன் கவிதையின் ராகம்/ பன் தானே எழுதி வைத்ததாய் படித்திருக்கிரேன். தாங்கள் உங்கள் பேட்டி ஒன்ற்ல் குரிப்பிட்டது போல சில  காலம் போனால் சிறு படங்கள் கூட கதைகளில் சாத்திய படலாம். ஒரு நாவல் கலயின் உச்சம், அதில் மற்ற எல்லாமும் அடங்கும் போது இது ஒரு நல்ல முயர்சியாகுமா?

அது போக நான் அழுத நியாபகம் சட்டென்று வரவில்லை - உங்கள் அறம் படிக்கும் பொது உடைந்து அழுதேன். அறம் தொகுப்பில் பல இடங்களிலும் கண்ணீர் மல்கினேன். வென்முரசும் உலுக்குகிரது சமயங்களில். இது காரனமே கூட தனியாக அமைதியாகவும் படிக்கிரேன். 

நீலம் - சில துளி கண்ணீரோடு தான் ஆரம்பிக்கிரேன். 

ராதை அளவு இல்லை என்றாலும் அனல் ஓடும் காதல் நெஞ்சத்தோடு தேரும் மலர்மரமல்லவா.. எனக்கும் அளிப்பதன் வழியாக அடைந்து நிறைவுறும் அறிவையும் அவன் கொடுக்கவில்லை அவன் ஆணாகவே பிரந்து வரட்டும் 

நன்றி
வெ. ராகவ்