Saturday, August 9, 2014

கர்ணனும் பீமனும்

ஜெ,

வண்ணக்கடல் நாவலின் சிறப்புகளாக நான் கண்டது முந்தைய நாவல்களை விட மனவியல் மர்மங்கள் நிறைய உள்ளன என்பதுதான். நிறைய விஷயங்கள் சொல்லப்படாமலேயே போகின்றன. பீமனுக்கும் கர்ணனுக்கும் நடுவே என்ன நடக்கிறது என்பதும் குந்திக்கும் கர்ணனுக்கும் நடுவே என்ன நடக்கிறது என்பதும் சொல்லபப்டுவதில்லை. ஊகிக்க முடிகிறது. ஊகிப்பதனால் அவை பெரிய விஷயங்களாக மாறிவிடுகின்றன

பீமன் இதுவரை பகைமை இல்லாத ஆளாகவே இருக்கிறான். சமையலில் மட்டும் ஈடுபடுகிறான். மண்ணாசை இல்லை. ஆனால் அவனுக்கு திடீரென்று வரக்கூடிய அந்த கோபம் மர்மமானதாக உள்ளது

சிவா

அன்புள்ள சிவா

ஒரு மர்மத்தை தொட்டுவிட்டால் பிற மர்மங்கள் அவிழத்தொடங்கிவிடும்

ஜெ