ஜெ
கனவிலிருக்கும்
கர்ணனிடம் கந்தர்வன் சொல்லும் வரியை இருமுறை திரும்ப வாசித்தேன். எல்லா இலக்கணங்களும்
அமைந்த ஜாதகம் என மண்ணில் எது சொல்லப்படுகிறதோ அது வானத்தில் அரிதினும் அரிதான தீய
ஜாதகம். அங்குள்ள கணகு எந்த விஷயத்துக்காக ஓர் உயிர் பிறந்ததோ அதைச்செய்ததா, அதில்
நிறைவும் மகிழ்ச்சியும் அடைந்ததா என்பது மட்டும்தான். இங்குள்ளவர்கள் அது அதிகாரம்
செல்வம் அடைந்ததா என்றுதான் பார்க்கிறார்கள்.
இன்றைக்குக்கூட
இதுதானே வாழ்க்கை. இப்போது உங்கள் இணையதளத்திலே ஓடிக்கொண்டிருக்கும் விவாதமே இதுதானே?
இரண்டு முகம்
உலகத்தின் பார்வையிலே வெற்றி என்பதன் அர்த்தம் ஒன்று. நம் மகிழ்ச்சியைக்கொண்டு நாம்
அடையாளப்படுத்துவது வேறொன்று. உலகுக்காக வாழ்ந்தவனாக கர்ணன் இந்தக்கனவுக்குள்ளே வெளிப்படுகிறான்.
ஆகவே நரகத்தில் சென்று நின்றிருக்கிறான்
மனோகர்