ஜெ
வெண்முரசில் இந்த
வம்சபரம்பரை பட்டியல் வந்துகொண்டே இருக்கிறது. வண்ணக்கடல் வெளிவந்தபோது இப்படிப் பட்டியல்கொடுப்பது
சலிப்பூட்டுவதாக உள்ளது எனறு நான் ஒரு நீண்டகடிதம் எழுதியிருந்தேன். நீங்கள் இது வம்சகதைதான்
என்று ஒருவரி எழுதினீர்கள்
இன்று கர்ணன் கனவிலிருந்து
வாழும்போதும் வம்சபரம்பரை வருகிறது. சந்திரன் முதல் கடைசி அரசன் க்ஷேமகன் வரையிலான பெரிய பட்டியல். அதை வாசிக்கையில் அந்த
வெறுமை திகிலூட்டியது. ஒட்டுமொத்தமாக ஒரு பெயர். அதுவும் அப்படியே மறைந்துவிட்டது
குருவம்சத்தின்
பெயர் பட்டியலுடன் இருக்கிறது மற்ற எல்லா பட்டியல்களும் அழிந்துவிட்டன. வெறும் நடுகற்கள்.
அவையும் இல்லாமலாகிவிட்டன. அந்த வெறுமையையே அந்தப்பட்டியல்கள் இப்போது அளிக்கின்றன
என நினைக்கிறேன்
செந்தில் குமார்