Wednesday, April 4, 2018

இருத்தலியல்

 
இனிய ஜெயம் 

பி  கே பாலகிருஷ்ணன் அவர்களின் இனி நான் உறங்கட்டே  நாவலை வாசித்து விட்டு நீங்கள் அவர் வசம் நிகழ்த்திய உரையாடலை   சொல்லி இருக்கிறீர்கள் .அது .

அந்த நாவல் கர்ணனை ''மையம் '' கொண்டது .பிறவற்றை ஒதுக்குவது . கர்ணனை மையம் கொள்வதால் பிற பாத்திரங்களுக்கு செய்ய வேண்டிய நியாயத்தை அந்த நாவல் செய்யவில்லை .

அவர் சொல்கிறார் ''சரி உனது கதையை நீ எழுது ''.

சமீபத்தில் நண்பர் மயிலாடுதுறை பிரபு ''  உண்மையில் ,  இந்த அந்நியமாதல் ,இருத்தலியல் துயர் ,  நிகழ்த்திய ஆற்றல்களால் கைவிடப்பட்ட அவலம் இவற்றை, அடிப்படையாக கொண்ட நவீனத்துவ நாவல்களில் ,  உண்மையாகவே  இன்றும்  அந்த பார்வையின்   பெருமதிப்பு கொண்ட நாவல்கள் எவை '' என்று கேட்டார் . நான்  பேர் லாகர் குவிஸ்ட் இன் அன்பு வழி , மற்றும்  இனி நான் உறங்கட்டே  நாவல்களை சொன்னேன் .

//அகல் விளக்கின் ஒளி எல்லை கட்டிய  அந்த களத்தை விட்டிறங்கி ,  முடிவரியா இருள் வெளிக்குள் இறங்கி நடந்து மறைந்தான் கர்ணன் //
இனி நான்  நாவலின் இறுதி வரிகள் இவை .

//
இளைய யாதவர் சொல்லி முடித்த பின்னரும் கைகட்டி அமர்ந்திருந்த கர்ணன் நெடுநேரம் உளம் மீளாமல் தலை குனிந்திருந்தான். பின்னர் நீள்மூச்சுடன் எழுந்து கைகூப்பினான். “ஒரு வினாவும் எஞ்சாது நிறைவுற்றேன், யாதவரே. விடுதலை நோக்கிய நேர்ப்பாதையை என்முன் காண்கிறேன்” என்றபின் திரும்பி முதற்புலரி எழுந்துவிட்டிருந்த முற்றத்தில் இறங்கி நடந்தகன்றான்.//

இன்றைய அத்யாயத்தின் இறுதி வார்த்தைகள் இவை . உங்கள் ஆசிரியர் முன் சொன்ன சொல்லில் வென்று விட்டீர்கள் . 
கடலூர் சீனு