Monday, April 2, 2018

சுழற்சிகள்




அன்புள்ள ஜெ

கர்ணனின் கதையிலுள்ள அந்த சுழற்சிகளை இன்னொருமுறை வாசித்தாலொழிய புரிந்துகொள்ளமுடியாதென நினைக்கிறேன். எது யதார்த்தமோ அதை இந்த வாழ்க்கையில் கனவாகக் காணாகிறான் கர்ணன். அதேபோல குந்தியுடனான உறவு. அவள் அவனை நெஞ்சிலேயே கொல்வது ஒரு வெர்ஷன். நெஞ்சிலிருந்து மீட்டு எடுப்பது இன்னொரு வெர்ஷன். இரண்டாவது வெர்ஷனின் கனவில் அவனை அவள் மீண்டும் கொல்கிறாள்.

அதேபோல கர்ணன் காணும் கனவில் குதிரைச்சாணி தின்பது. அந்த கனவுவாழ்க்கையில் அதையே யதார்த்தமாக எண்ணி வாந்தி எடுப்பது. அதோடு விஸ்ரவனின் கதை. அங்கே குந்தி சௌரபையாக வருகிறாள். அவன் கர்ணனாக இருக்கிறான். ஒரு சூதனின் பகையால் குருகுலம் அழிவதுகூட ஒரு பெரிய தொடர்ச்சியின் முடிவாக உள்ளது. அவன் கர்ணனின் வஞ்சத்தின் எதிர்காலவடிவமாக இருக்கிறான்

இந்த கதை எதிலே உள்ளது என தேடி கடைசியில் விஷ்ணுதர்மேந்திர புராணத்தில் என்ரு கண்டுபிடித்தேன்

சாரங்கன்