Saturday, April 18, 2015

அதிகார அடுக்கு 3




ஜெ

கிருஷ்ணன் அவர்களின் கேள்வி முக்கியமானது. அதற்கு வந்த பதிலும் குறிப்பிடத்தக்கது. மகாபாரதக் காலகட்டம் என்பது பலவகையான அதிகார அமைப்புகள் இருந்ததாக உள்ளது. பின் தங்கிய அரசாங்கங்களில் குலச்சபை வலிமையாக உள்ளது. அரசன் வலிமையாக ஆனபிறகு குலச்சபைகளின் அதிகாரம் அனேகமாக டோக்கன் பவர் ஆக மாறிவிட்டிருக்கிறது


மூத்தவர்களுக்கு இன்னொரு அதிகாரம் உண்டு. அதுவும்கூட ஒரு டோக்கன் பவர் தான். பீஷ்மர்தான்  நான்குபடைகளுக்கும் தளபதி. ஆனால் அதற்கு பெரிய முக்கியத்துவமெல்லாம் ஒன்றும் இல்லை. அவரால் எதையும் பெரிதாக முடிவெடுக்கமுடியாது.

அரசகுலத்தினருக்கு தனியான அதிகராம் இருக்கிறது. ஆனால்அவர்களுடைய அதிகாரம் பலவகைகளில் கலந்து கிடக்கிறது. இதை கடைசியில் குருஷேத்ரப்போரிலேயே காணலாம். தலைவர்களை அவர்கல் தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்காகச் சண்டையெல்லாம்கூட நடக்கிறது

மகாபாரதத்தில் இப்படி பவர் செண்டர் மாறுவது உண்டுபண்ணும் பூசல்கள் பல உள்ளன. சிசுபாலனை கிருஷ்ணன் வதம் செய்ததே இதற்காகத்தான் என்பதைக் காணமுடிகிறது

இந்த பலவகையான அதிகார மையங்களும் சிடுக்குகளும் உண்மையிலேயே அன்றைக்கு இருந்தவை. அவற்றை வெண்முரசு அழகாகச் சொல்கிறது என நினைக்கிறேன்

எம்.மீனாட்சிசுந்தரம்