ஜெ
பால் உறைகுத்துதல் என்ற விஷயம் விரிந்துகொண்டே போகிறது. எப்போது பால் மோராகிறது என்ற கேள்வி வழியாக திருதராஷ்டிரரின் மனசு மாறுவதை சுட்டிக்காட்டியதும் கவனிக்க ஆரம்பித்தேன். மெதுவாக அடுத்தடுத்துச் சென்றுகொண்டே இருக்கிறது. பால் மோராகவேண்டும் என்றால் உறைமோர் ஒரு துளி வேண்டும். அது உனக்குள்தான் இருக்கிறது என்று குண்டாசி சொல்வது முக்கியமான இடம்
அதேபோல இந்த அணங்கு விஷயம். பெண்களுக்குள் பால் உறைமோர் விழுவதுபோல முன்னாலிருந்த அணங்குப்பெண்ணின் ஏதோ ஒன்று குடியேறுகிறது என்று நினைக்கிறேன். அதை அறிவது ஆச்சரியம் அளிக்கக்கூடியதாகவே இருக்கிறது
இந்தவகையிலே குறுக்குநெடுக்காக ஓடிச்செல்லும் ஒரு நெசவு வெண்முரசிலே இருக்கிறது. ஆகவேதான் அதிலிருந்துவெளியே வரவே முடியவில்லை
ஜெயக்குமார்