Saturday, April 18, 2015

ஆண் அணங்கும் பெண் அணங்கும்




ஜெ,

வெண்முரசில் ஆரம்பம் முதலே வந்துகொண்டிருக்கும் அணங்குசூழ்தல் நாவலை வேறேதோ ஒரு இடத்துக்குக் கொண்டு செல்கிறது. ஒருபோதும் சொல்லப்படாத ஒன்றாக அந்த அணங்கு என்பது இருந்துகொண்டே இருக்கிறது. அதன் அடிப்படை என்ன ஏன் அது அங்கே இருக்கிறது ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அதை மனசால் உள்வாங்கிக்கொள்ளவும் முடிகிறது



இவ்வளவுக்கும் அணங்கு அரசிகளை மட்டும்தான் பிடிக்கிறது. அது அவர்களை பேசவைப்பதில்லை . உள்நோக்கிக் கொண்டுசெல்கிறது. ஆனால் வெளியே பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அதன்பின்னர் ஒன்றுமே சொல்வதற்கு இல்லை. போகும்போதுகூட ஒன்றும் சொல்லிக்கொண்டு போவதில்லை. பேசாமல் உதிர்ந்துவிடுகிறார்கள்

அணங்கு என்பது ஆண்களைப் பிடிக்குமா என்று கேட்டால் குண்டாசியைப்பிடித்திருப்பதும் ஓரு அணங்குதான் என்று சொல்லலாம். அது அவனை கூச்சலிடுவபவனாக ஆக்கியிருக்கிறது. அவன் அதிகாரத்தை நோக்கி கிண்டல் செய்து அடிவாங்கிக்கொண்டே இருக்கிறான்.

இந்த இடம் அளிக்கும் மனச்சுமைதான் வெண்முரசில் வரும் அததனை அரசாங்க விஷயங்களையும் ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொள்ளச் செய்துவிடுகிறது என நினைக்கிறேன்

சிவராம்