ஜெ சார்
வெண்முரசின் பல
பகுதிகளை இப்போது நினைவிலிருந்து எடுக்க முடியவில்லை. சில சமயங்களிலே அவை வாழ்க்கைப்போக்கிலே
எப்போதாவ்து அசந்துமறந்து நினைவுக்கு வரும்போது ஒரு விதமான பரவசம் ஏற்படுகிறது.
கொஞ்சநாள் முன்னாடி
ஒருநாள் என்னுடைய பெரியப்பாவும் அப்பாவும் முட்டிக்கொண்டதையும் பெரிய அத்தையின் மரணத்திலே
ரெண்டுபேரும் கட்டிக்கொண்டு கதறிவிட்டதையும்
அம்மா சொல்லிக்கொண்டிருந்தாள். அப்போது சத்யவதியும் அம்பிகை அம்பாலிகையும் காட்டுக்குப்போனதை
நினைத்தேன். மெய்சிலிர்த்துவிட்டது என்றால் ஜாஸ்தியாகச் சொல்வதுபோல இருக்கும். ஆனால்
உண்மை.
அதற்குப்பின்னாடி
இன்றுவரை வெண்முரசிலே அவர்களைப்பற்றி ஒன்றுமே பேசப்படவே இல்லை. அப்படியே அதையெல்லாம்
மறந்து அடுத்த கட்டத்துப்போய்விட்டார்கள். சந்தனு பிரதீபர் போன்றவர்கள் வம்சவரிசையிலே
வருவதோடு சரி. வாழ்க்கையிலே இறந்தவர்களுக்கு உண்மையாக உள்ள இடம் அதுதான்.
சத்யவதி எப்பேற்பட்ட
கதாபாத்திரம். ஆனால் இன்றைக்கு நகரத்துக்குள் வருபவர்கள் அவளைப்பற்றி பேசுவதே கிடையாது.
நாமும் அபடியே அடுத்தடுத்த விஷயங்களுக்குள்ளே போய்விட்டோம்
விஸ்வநாதன்