Thursday, April 16, 2015

பகுளம்




திரு. ஜெ,

"அவன் பகுளத்தை நோக்கிக்கொண்டு புன்னகைத்தான். பெண்கள் நல்லூழ் கொண்டவர்கள். உடலாக அவர்களின் உள்ளம் அமைந்துள்ளது. உடலைக் கொண்டு உள்ளத்தை அவர்களால் கையாளமுடிகிறது. உடனே இன்னொரு எண்ணம் வந்தது. அவர்களின் உடலை கைப்பற்றுபவன் உள்ளத்தை கைப்பற்றிக்கொள்ள முடியும். உடலை அவமதித்தும் ஊடுருவியும் உள்ளத்தை சிதைக்கமுடியும். முதல்முறையாக அவன் சேதிநாட்டு இளவரசியரை தூக்கிவர எண்ணியமைக்காக நாணினான். அவர்களுக்கு அவனைப்பிடிக்கவில்லை என்றால் அதற்கிணையான இழிசெயல் வேறு என்ன? அவன் அரக்கர்கோன் ராவணனை நினைத்துக்கொண்டான். அரசர்களனைவருமே ராவணன்கள்தான் போலும்." 


எதிர்காலத்தில் திரௌபதியின் உள்ளத்தைச் சிதைப்பதற்குரிய (மானபங்கம் செய்வதன் வழியாக) ஒரு சிறு பொறி துரியோதனன் மனதில் அவனறியாமல் சூழ்கொண்டுவிட்டது.  ஆனால் விருப்பமில்லாத பெண்களைக் கவர்ந்து வருதல் அவன் மனதில் நாணத்தை ஏற்படுத்தும் நிலையில் இருப்பவன், எவ்வாறு கிருஷ்ணையின் துகில் உரிய உத்தரவிடப்போகிறான் என்பது தற்போது வியப்பையே ஏற்படுத்துகிறது.  -

கணபதி கண்ணன்