ஜெ,
இன்றைய அத்தியாயத்தில் கண்ணனின் இசையை வர்ணித்திருக்கிற விதம் அருமை. அதை பிரபன்ச்ஜ இசையாலவே சொல்லியிருக்கிறீர்கள்.[ யதுகுல காம்போதி, அல்லது செவ்வழி] ஆனால் வர்ணனை ஒரு பாட்டையோ ராகத்தையோ அல்ல. அது பிரபஞ்ச ராகம்
ஒருபார்வையிலே எல்லாம் ஒன்றே போலத் தோன்றுகின்றன. திரும்பத்திரும்ப ஒன்றேதான்
ஒரே சுதியில் ஒரே சுவரக்கோவை. திரும்பத்திரும்ப அதுவே ஒலித்தது. அறியாக்குழந்தை ஒன்று கற்றுக்கொண்ட முதல் பண். ஓர் இலை. மீண்டுமொரு இலை. இலைப்பெருவெளி. ஒரு விண்மீன். இன்னொரு விண்மீன். ஓர் இருளலை. ஓர் ஒளிக்கதிர். பிறிதொரு ஒளிக்கதிர். அவனுக்கு சலிப்பதேயில்லையா?
ஆனால் வேறுபாட்டைக் கவனித்தால் அந்த வேறுபாடே பிரம்மாண்டமாக ஆகிறது. அது முடிவில்லாதது. திரும்ப ஒன்று நடக்கவே நடக்கமல் முடிவிலலமல் போவது பயங்கரமாக உள்ளது
ஒன்று பிறிதிலாது பன்னரும் பெருங்கோடிகளெனப் பெருகுவது இது. ஒன்றுபிறிதிலாததே முடிவிலி. அந்த அச்சம் ஆயிரம் இறப்புக்கு நிகர். பல்லாயிரம் இன்மைக்கு நிகர். பலகோடி வெறுமைக்கு நிகர். ஒன்றுபிறிதிலா வெளியில் சென்று மறைந்த எதுவும் பொருளிலாதாகிறது. பொருளிலாத பெருக்கில் இருப்பென்ன இறப்பென்ன இயல்வதுதான் என்ன? இங்கே நின்றிருப்பது ஏதுமில்லையென்றால் அன்றிருந்ததும் இன்றுள்ளதும் வந்துறுவதும் என்ன?
ரெண்டும்தான் பிரபஞ்சம். அதுதான் அவன் சங்கீதம்
சுவாமி