அன்புள்ள ஜெ,
பானுமதி அணங்குகள் பற்றி கூறுவது நன்றாக இருக்கிறது.சம்படை மீதிருந்த அணங்கு எது?ஒவ்வொரு மனதினுள்ளும் உறைந்திருக்கும் தனிமையா?
பெண்கள் அனைவருமே அதை ஏதாவது ஒரு தருணத்தில் உணர்ந்திருப்பார்கள்.மனதின் வெறுமை,உக்கிரம்,துரோகம் என்று வெளிக்காட்ட இயலாமையே அணங்குத் தன்மையெனும் மௌனமாகிறது.எங்களூர்களில் கோவில்களில் சந்நதம் வந்துஆடும் பெண்களிடம் அதை நன்றாகப் பார்த்திருக்கிறேன்.அமைதியாய் நிற்பவள் உச்சகட்ட உணர்ச்சியில் பற்களைக கடித்துகொண்டு கத்தும்போதுஎங்கிருந்து வரும் அந்த வேகம்?
அதே போன்றதே பேய்பிடித்ததாகக் கூறப்படும் பெண்களும்.மிக பின்தங்கிய பகுதியில் இருந்ததால் பேய் பிடிப்பதும்,பேய் ஓட்டுவதும் அங்கு சாதாரண நிகழ்வாய் பார்த்திருக்கிறேன்.நிறைய பேர் கூறிவிட்டது தான்,இது உளவியல்சார்ந்த மன அழுத்தத்தின் வெளிப்பாடாக இருக்கலாம்.
ஒரு அழகான அக்கா இருந்தார்கள்.அவர்களுக்கு அடிக்கடி பேய் பிடித்துவிடும்.ஒரே இடத்தை கண்ணை விழித்துப் பார்த்தவாறு அமர்ந்திருப்பாள்.தலையெல்லாம் கலைந்து சேலை மேலே நிற்காமல் பார்க்கவே பயமாக இருக்கும்.ஆனாலும்அவளை எல்லாரும் பார்ப்போம்.
பேய் ஓட்டும் சத்தம் மட்டும் கேடகும் .எங்களை உள்ளே விட மாட்டார்கள்.அவளைப் பிடிக்க நான்கு பேரால் கூட முடியாது என்பார்கள்.
அவள் மறுநாள் குளித்து,உடுத்தி வந்தால் அவள் முகம் அத்தனை சாந்தமாக இருக்கும்.அவள் வீட்டுக் காரருக்கும்.குடும்பத்திலுள்
அவள் மீதிருந்த அணங்கு எது?மற்ற நாட்களில் சாததாரணமாக இருப்பாள்.
இப்படிப்பட்ட விவரிப்புகளே வெண்முரசை தனித்துவப் படுத்துகின்றன.
துரியன் பானுமதியின் மீது கொள்ளும் அன்பு மிக அழகாக வந்திருக்கிறது.
இப்படிப்பட்ட விவரிப்புகளே வெண்முரசை தனித்துவப் படுத்துகின்றன.
துரியன் பானுமதியின் மீது கொள்ளும் அன்பு மிக அழகாக வந்திருக்கிறது.
அன்புடன்
எம்.
எம்.