Monday, April 27, 2015

பெண்களின் வண்ணங்கள்







ஜெ

பெண்களின் குணச்சித்திரத்தை அமைப்பதில் எப்போதுமே ஒருசில டைப் கதாபாத்திரங்களாக அமைந்துவிட வாய்ப்புகள் நிறைய உள்ளது. எனென்றால் உணமியிலேயே பெரும்பாலான பெண்களின் குணச்சித்திரம் அப்படித்தான். அவர்களுக்கான வாழ்க்கைவாய்ப்புகள் மிகவும் குறுக்கபப்ட்டிருப்பதனால் அவர்களுடைய வழ்க்கையின் பா0ர்வையும் அப்படியே ஆகியிருக்கிறது.

இதனால் பெண்களை இலக்கியத்திலே பார்க்கும்போது இரண்டு மூன்று வெர்ஷன்ஸ் மட்டும்தான் கிடைக்கின்றன/ கண்ணகி மாதவி மாதிரி. கண்ணகிக்கு நேர் எதிர் மாதவி. நல்ல பெண் கெட்டபெண். செக்ஸியான எப்ண் குடும்பப்பெண் இந்தமாதிரி. மகாபாரதக்கதாபாத்திரங்களையே கொஞ்சம் கொஞ்சமாக அப்படி ஆக்கிவைத்திருக்கிறார்கள்.

ஆகவே வெண்முரசின் பெண்களை வாசிப்பதுகூர்ந்து பார்க்கவேண்டியதாக இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் கிரே ஏரியாக்களுடன் இருக்கிறார்கள். நுணுக்கமான வேறுபாடுகள் உள்ளன. குந்தி காந்தாரி திரௌபதி பானுமதி நால்வருமே அரசிகள் என்றாலும் முழுக்கமுழுக்க வேறுபட்ட குணச்சித்திரங்களுடன் இருக்கிறார்கள். அது ஆச்சரியமானதாகவே இருக்கிறது. இந்த நுட்பத்தை திரும்பவராமல் எந்தளவுக்குக் கொண்டுபோகமுடியும் என்பது பெரிய சவால்தான்

சண்முகம்