ஜெ
வெண்முரசு முழுக்க இளவரசிகள் உள்ளே வந்துகொண்டே இருக்கிறார்கள். விளக்கிலே வந்து விழக்கூடிய வண்ணத்துப்பூச்சிகள் அவர்கள் என்று தோன்றியது. ஆரம்பத்திலேயே அம்பாலிகையும் அம்பிகையும் வரும் காட்சி வருகிறது. மிக இளமையாக ஒன்றுமே தெரியாமல் அம்பாலிகை வருவதும் வழியிலேயே ஒரு வெள்ளைப்பூவை பறித்து வைத்துக்கொள்வதும் எல்லாம் நினைவிலிருக்கின்றன. சிவை நீச்சலடித்துக்குளிக்கும் இடம் நினைவுக்கு வந்தது
அதன்பின்னர் அடுத்ததலைமுறை இளவரசிகள். அதிலே சம்படையும் தசார்ணையும் சின்னப்பெண்களாக சண்டைபோட்டு அக்காக்களிடம் கொஞ்சி அவர்களின் துணிகளுக்குள் மறைந்துகொண்டு வாழும் காட்சி நினைவுக்குவந்தது. சம்படை சிவையின் அதே விதி
அதுதான் இப்பவும். அதெபொல்ல ஒன்றும் தெரியாத இரண்டு சிறுமிகள். அதேபோல உற்சாகமாக இருக்கிறார்கள். விட்டில்பூச்சிகள் போல அஸ்தினபுரியை நோக்கிப்போகிறார்கள்
அரசிகளின் நீளமான வரிசையை ஜாபிதா பண்ணுகிறீர்கள். அது ஒரு குரோனிக்கிள் என்றுதான் தோன்றும். ஆனால் அந்த இடத்திலே அவ்வளவு பெயர்கள் ஒரு பெரிய துக்கத்தை அளித்தது ஒவ்வொரு பெயரும் ஒரு முகம் ஒரு வாழ்க்கை . அதற்காகத்தான் அந்த ஜாபிதா என்று நினைத்தபோது அந்த நுட்பம் பிரமிப்பை அளித்தது
சுவாமி