Sunday, April 19, 2015

நோயறிவு




ப்ரிய ஜெ!

        இன்றைக்கு வெண்முரசில் வலி பற்றிய துரியோதனன் எண்ணங்களை வாசித்தேன். மிகஆச்சரியமாக இருந்தது. நோய்மை என்பதையே என் பதின் பருவம் வரை நான்அறிந்திருக்கவில்லை. காய்ச்சல் வந்து தனித்த கவனம் பெறமாட்டோமா என்றுஏங்கிய குழந்தைப் பருவம் என்னுடையது. ஆனால் எதிர்பாரவிதமாக என் 20வதுவயதில் படுத்த படுக்கையாக 2 மாதம் கிடக்க வேண்டி வந்தது.

துரியோதனன்எண்ணிக் கொள்கிறாற்போலவே படுத்துக் கிடக்கிற வரையில் யாரையாவது ஏதாவதுகாரணதுக்காக அருகில் அமர்த்திக் கொள்ளும் விழைவு இருந்து கொண்டேஇருந்தது. என் பாட்டியின் மென்மையான கைகளின் தொடுகை இன்னும்நினைவிருக்கிறது. எழுந்து அமர முடிந்ததுமே நடந்துவிட வேண்டும் என்றுதான்தோன்றியது. நடக்க முடியாதோ என்று ஆழப் பதிந்த எண்ணத்தை இன்றும் வெல்லமுடியாது வேகமாக நடக்கத் தூண்டுகிறது.
மனதுக்கு இத்தனை சமீபமாக அறிவால் ஒருவர் வர முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது.

மீனாம்பிகை


அன்புள்ள மீனாம்பிகை,

அறிவால் அணுகிவரவில்லை. கனவால் அணுகிவருகிறேன். அதில் நாமனைவரும் ஒன்றே

ஜெ