Friday, April 24, 2015

அரசியும் மருமகளும்



ஜெ

குந்தி புதியதாக வந்த இளவரசிகளுக்குச் சமானமாக நகருக்குள் நுழைய ஆசைப்படும் இடத்தில் உள்ள மனதத்துவத்தைப்பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தேன். அதை எளிதிலே புரிந்துகொள்ளமுடியாது. அவள் அந்த நகரத்துக்குள் மருமகளாக வந்து ஐம்பதாண்டுகளாகப்போகின்றன. ஆனால் இன்னும் அவள் அதற்கு மருமகள்தான். அப்படி அன்னியமாகத்தான் போய் இறங்கவெண்டியிருக்கிறது. புதிதாகவந்தவர்களிடம் போட்டியிடவேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் மரியாதை இல்லை.

குந்திநகருக்குள் செல்லக்கூடிய காட்சி அற்புதமாக வந்திருக்கிறது. அவளைப்பற்ரி எவருக்குமே அக்கறை இல்லை. தெரியும். ஆனால் ஈடுபாடு இல்லை. ஏனென்றால் பத்தாண்டுகளாகிவிட்டன. அவளை ஒரு கதையாகத்தான் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். இதுதான் மக்களின் மனநிலை. ஒரு வருஷத்திற்குள் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெறும் ஞாபகமாக ஆகிப்போனதையும்தான் நாம் பார்த்தோமே


ஜெயராமன்