இன்றைய அத்தியாயத்தில்
அஸ்தினபுரியின் அதிகாரத்துக்கே சவாலாக நிற்கும் அந்த வேலைக்காரன் அற்புதமான கதாபாத்திரம்.
அவனுடைய மனநிலையை மிகச்சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். அவனைப்போன்றவர்கள்தான் திருடர்களாக
ஆகிறார்க்ள். இல்லாவிட்டால் கலைஞர்களாக ஆகிறார்கள். இல்லாவிட்டால்சார்வாகனைப்போன்ற
ஞானிகளாக ஆகிவிடுகிறார்கள்.
அவன் அதிகாரத்துக்கு
எதிரானவன். எல்லாரையும் அள்ளிப்போட்டு ஒரு மனுஷக்கூம்பாரமாக ஆக்கி கோபுரம் கட்டுவதற்கு
எதிரானவன். நான் வேறு மனுஷன் என்று சொல்கிறான். தனிமையாக நிற்க நினைக்கிறான்
அவனைத்தான் தெய்வங்கள்
தேடிக்கொண்டிருக்கின்றன என்று எழுதியிருப்பதும் அவனை கிருஷ்ணன் பார்த்ததுமே அடையாளம்
கண்டுகொள்வதும் அற்புதம். அவன் அந்தத் திருட்டுத்தனத்தை மட்டும் செய்திருந்தால் கிருஷ்ணன்
அவனை விட்டிருப்பா. அவன் அதற்குப்பின் க்ளூ விட்டு சவால் விட்டதனால்தான் கிருஷ்ணனுக்கு
அவனைப்பிடித்திருந்தது என்று தோன்றியது.
அவனைக்கொல்லமுடியாது.
கொன்றால் அவன் சாமியாக ஆகிவிடுவான். அவன் கண் சாமியின் கண் என்பது ஒரு அற்புதமான இடம்.
அவனைப்போன்றவர்கள்தான் ‘பூஜ்யபலிகள்’
சுவாமி