Monday, April 20, 2015

இரு தெய்வங்கள்



ஜெ,

பாஞ்சாலியை சாத்யகி சந்திக்கும் இடம் மிக நுட்பமாக அமைந்திருந்தது. மணமாகி ஆணை அறிந்த ஒரு அழகி இளைஞனைச் சந்திக்கும்போது நிகழும் சீண்டலும் ரகசியமான குறும்பும் எல்லாம் அற்புதமானவை. ஆறாவதாக எனக்கு இன்னொருவரை பார்க்கிறேன் என பாஞ்சாலி சொல்லும் இடத்தில் வாய்விட்டே சிரித்துவிட்டேன்.

ஆனால் மெல்லமெல்ல அந்த சித்திரம் விரிவாகி பானுமதிக்கு அவள் செய்தி அனுப்பும்போது இன்னொருத்தியாக ஆகிறாள். ஒரு பெண்ணாக  இருந்து தெய்வம்போல ஆகிறாள். இளவரசியாக இருந்தவள் வரலாற்றுநாயகியாக ஆகிறாள். முக்காலத்தையும் அறிந்தவள் போலப்பேசுகிறாள்

கிருஷ்ணனுக்கும் பாஞ்சாலிக்கும் மட்டும்தான் இந்த அனைத்தையும் கடந்த பாபர்வை இந்நாவலில் இருக்கிறது. அவர்களுக்குத்தான் தெய்வாம்சத்தையும் அளித்திருக்கிறீர்கள்

சுவாமி