Sunday, April 19, 2015

அதிகார அடுக்கு 4



ஜெ,

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

அதிகார அடுக்கு பற்றிய கடிதங்களை எல்லாம் வாசித்தேன். சிறந்தமுறையிலே செயல்படும் எந்த ஒரு அரசாங்கத்திலும் அப்படி மாற்றமுடியாத உறுதியான அதிகாரம் இருக்காது. அதிகாரமே பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கும். அந்த அதிகாரம் பலவகையில் ஒன்றுக்கொன்று முரன்பட்டு செயல்படுவதாகவும் அமைப்பு இருக்கும்

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உள்ள அமைப்புதான் இன்றைக்கும். இன்றைக்குக்கூட மாவட ஆட்சியர் மாவட்ட நீதிபதி மாவட்டக் காவல்துறைதலைவர் ஆகியோருக்கு சமானமான அதிகாரம் இருக்கும்படித்தான் நம்முடைய அமைப்பு உள்ளது

சண்முகம்


அன்புள்ள சண்முகம்,

உண்மை. ஆனால் அரசராட்சிக்காலத்தில் எந்த விதமான ஆவணப்பின்புலமும் இல்லாமல் வெறுமே அரசகுடியில் பிற்ந்தார் என்பதற்ககாவும் அரசருக்கு நெருக்கமானவர் என்பதற்காகவும் உயரதிகாரம் கையில் இருக்கும் சிலர் இருப்பார்க்ள்

சஞ்சய்காந்தி, சோனியாகாந்தி போல. அதேபோல எம் ஓ மத்தாய் , ஆர் கே தவான் போல

ஜெ