ஜெ
கண்ணனின் புல்லாங்குழலிசையை வர்ணித்திருக்கும் இடம் அதேபோல சகுனியிடம் பகடை ஆடுவதிலும் வருகிறது
அவனுக்கு சலிப்பதேயில்லையா? அறிவற்ற குழந்தை. அறிவுவிளையாத குழந்தை. அழகு மட்டும் கனிந்த குழந்தை. திரும்பத்திரும்ப. மீண்டும் மீண்டும்…
என்று அவன் இசையை பூரிஸ்ரவ்ஸ் கேட்கிறான் . சகுனி அவனுடன் கிருஷ்ணன் விளையாடும்போதும் அதைத்தான் அறிகிறான்
இல்லை, இவன் குழந்தையேதான். முதிர்ந்த உள்ளம் இத்தனை முறை ஒன்றையே திரும்பத் திரும்ப செய்யாது. அவர் அவன் கண்களை நோக்கினார். அவற்றில் சற்றும் சலிப்பில்லை என்பதைக் கண்டு திடுக்கிட்டு விழிவிலக்கிக்கொண்டார். புதுவிளையாட்டைக் கண்டடைந்த குழந்தையின் உவகை மட்டுமே அவற்றில் இருந்தது.
இருவருக்கும் ஒரே பிரபஞ்சலீலையைத்தான் காட்டுகிறான். ஒரேமாதிரி நடந்துகொண்டிருக்கிறது. மாறாது என்று நினைத்தால் படுபயங்கரமான மாற்றம் கொண்டிருக்கிறது
சாரங்கன்