அன்புள்ள ஜெ அன்னையின்
மனதை படைத்த பிரமனாலேயே அறிய முடியாது என்னும்போது அடியேன் எங்கு அறிவது. எத்தனை நடனம், எத்தனை
அபிநயம். எத்தனை முன்பின் ஓட்டம். அறியமுடியும் என்று பின்னால் சென்றவன் செத்தான்.
அவன் சூதன் அவனுக்கு
என்ன முறைமை? என்று
குந்தி சொன்ன வார்த்தையில் உண்மையில் கர்ணன்மீது கோபம் கொண்டுதான் எழுந்தாள் என்று நினைத்தேன். இல்லை..இல்லை.
அவள் திருதராஸ்டிரன்மேல் அல்லவா கோபம் கொண்டு எழுந்து இருக்கிறாள்.
குந்தி விரும்புவது
என்ன? கர்ணன் திருதராஸ்டிரனை அடித்துக்கொன்று இருந்தால்கூட மகிழ்வாள் என்று நினைக்கின்றேன்.
திருதராஸ்டிரன் கையால் தனது மகன் அடிப்பட்டு நோயில் கிடந்தான் என்பதற்காக அல்லவா அவனை
சூதன் என்கிறாள். நூறு சதவீதம் அவள் தாய்மட்டும் ஜெ.
“அவருக்குத்தெரியும்… வேண்டுமென்றே செய்யபப்ட்டது அது.” என்ற இடத்தில் அவள் வாரணவதம் சதிவரை சென்று வந்து
இருக்கிறாள். தனது ஆறாவது மகனையும் கொல்வதற்காகவே அது செய்யப்பட்டது என்று நம்புகிறாள்.
எத்தனை பெரிய ரணத்தை உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு இவள் அரசுசூழ்தல் செய்கின்றாள்.
அணங்குபிடித்த விதுரரின் தாயை,
இளையகாந்திரி சம்படையை உள்ளுக்குள் ஒன்றாக வைத்து வாழ்கின்றாள், ஆனால் வெளியே பெரும்
தேவயானியாய் நடிக்கிறாள். தனது மறுவடிவமான திரௌபதியை உள்ளுக்குள் வழிபடுகின்றாள், வெளியே
மாமியார் வேசம் போடுகின்றாள். கர்ணனின் கன்னித்தாயாகவே
இருக்கிறாள். பாண்டவர்களின் முது அன்னையாக இருக்கிறாள். கருப்பையில் குருதியும், மார்பில்
பாலும் வடியும் ஒரு தாய்படும் பாடு என்றால் சரியாக இருக்குமா? காலம் குந்தி போன்ற பெண்களை
பெரும் அளவுக்குதான் இம்சிக்கின்றது.
ராமராஜன் மாணிக்கவேல்