Wednesday, April 1, 2015

மக்களில் ஒருவன்


ஜெ,

வெண்முரசில் உருவாகி வரும் கிருஷ்ணனுக்கு இரண்டு முகங்கள் உள்ளன. ஒன்று அவன் மக்களில் ஒருவனாக மக்களால் விரும்பப்படுபவனாக இருக்கிறான். மக்களை உண்மையிலேயே விரும்புகிறான். மக்களை நன்றாக அறிந்துவைத்திருக்கிறான்

மறுபக்கம் மதியூகியாகவும் இருக்கிறான். ராஜதந்திரம் செய்கிறான். அரசாங்கப்பணிகளில் ஈடுபடுகிறான். அவனுக்கு ஏன் சந்தைகள் மிகவும் பிடிக்கின்றன ஏன் அவன் தெருக்களை மிகவும் விரும்புகிறான் என்று இதிலிருந்தே அறியலாம்

மறைந்த என் தந்தை பெருமாள்நாடார் காமராஜரை அறிந்தவர். காமராஜருக்கும் இந்த இரண்டு குணங்களும் உண்டு. அவருக்கும் மக்கள் கூட்டம் மிகவும் பிடிக்கும். அவர் எங்கே போனாலும் சந்தையையோ முச்சந்தியையோ கண்டால் நிறுத்தி வேடிக்கை பார்க்காமல் போகமாட்டார் என்று சொன்னார்


பச்சைமால்