ஜெ,
வெண்முரசில் பூரிசிரவஸின் பயணங்கள் வியப்பூட்டுகின்றன. ஒரு நாவலில் மண்ணும் விண்ணும் எத்தனை முக்கியமானவை என்பது இப்போதுதான் தெரிகிறது. சொல்லப்போனால் கொஞ்சநாள் அரண்மனைச்சதிகள் உளவியல் பிரச்சினைகள் அரசியல் என்று ப்போனபோது கொஞ்சம் ஏக்கமாகவே இருந்தது. பூரிசிரவஸ் வந்ததும்தான் மிகுந்த ஆறுதல் ஏற்பட்டது
குறிப்பாக இன்று பூரிசிரவஸ் அந்த மரங்களாலான கோட்டையை பார்க்கும் இடம் உச்சம். தொடக்கம் முதலே நுட்பான காட்சிகள். அவன் போகும் வழி. அங்கிருந்த வெளிச்சம். சத்திரங்கள். அந்தப்பாலம். கடைசியில் அந்தக்கோட்டை. மரங்களின் மேல் அமைந்த நகரம்.
சகலபுரி என்றால் இன்றைய சியால்கோட் இல்லையா? அது இன்று பாகிஸ்தானின் பஞ்சாபில் செனாப் நதியின் கரையில் இருக்கிறது அந்நகரை நாம் பார்க்க வாய்ப்பில்லை. கனவிலேயே பார்த்துவிடவேண்டியதுதான்
ஜெயராமன்