Sunday, April 12, 2015

பூரிசிரவஸின் பெண்கள்



ஜெ சார்

வெண்முகில் நகரம் முடியப்போகிறது என்று நினைக்கிறேன். அது பூரிசிரவஸில் முடியும் என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது. மகாபாரதத்தில் பூரிசிரவஸ் ஒரு சின்ன கதாபாத்திரம். அதற்கு என்று ஒரு பெரிய தனியடையாளம் இல்லை. அதை நீங்கல் அன்புக்குரிய ஒரு மலையிளவரசனாக மாற்றி அவனுக்கு அழகான ஒரு முகத்தையும் அளித்துவிட்டீர்கள். அதன் அழகை பலமுறை வாசித்தும் தீரவில்லை. எத்தனை முறைவாசித்தாலும் புதியதாகவே இருக்கிறது.

பூரிசிரவஸ் ஏன் இத்தனைபெரியதாக வருகிறான் என்று சிந்தித்தபோது தோன்றியது அவன் வழியாக எல்லா பெண்களும் அறிமுகம் ஆகிவிட்டார்கள் என்றுதான். பூரிசிரவஸ் இல்லாவிட்டால் இந்தப்பெண்களுக்கெல்லாம் முகமே இல்லை. தேவிகை விஜயை மட்டும் இல்லை துச்சலைக்குக்கு கூட மகாபாரதத்திலே ஒருசில வரிகளே தரப்பட்டிருக்கின்றன. நீங்கள் அவர்களை அழியாத ஓவியமாகக் காட்டிவிட்டீர்கள்.


ஜெயராமன்