Sunday, April 12, 2015

பகற்கனவுகள்




அன்புள்ள ஜெயமோகன், 

எதிர் மறை கனவுகள்.... 
வன்மம் மட்டும் அல்ல. கடும் குரோதம், கோபம், காமம் என சில உணர்வுகள் மெல்ல மெதுவாக உள்ளே ஊறி கொழித்து சட்டென்று ஒரு எரிமலை போல, இடித்து கொட்டி தீர்க்கும் மழை போல, எதிர்பாரா கணங்களில் தன்னை மீறி புற உலகில் மற்றவர்கள் மீது பொழிந்து, சூழ் நிலையை சிதைத்து, எஞ்சி இருந்த ஆற்றலை உறிஞ்சி துப்பி விட்டு ..... உணரும்போது சக்கை என தோன்றுகிறது.  உடலை முழுவதுமாக உண்டு விட்டது போல ... மீண்டும் சில வாரங்கள் ஆகலாம் ஊற்று ஊறி வேறு வடிவம் கொண்டு வெளி வர.

பிரமை அல்லது நிஜமா என்று தெரியாத கணங்கள். வெளி வருவது சாத்தியம் இல்லையோ ?


லிங்கராஜ்