ஜெ,
வெண்முகில்நகரத்தில் கிருஷ்ணனைக் காட்டியிருக்கும் விதத்தின் பல்வேறு முகங்களை நானே மனதுக்குள் தொகுத்துக்கொண்டேன். ஒன்று, அவரை நான் ஒரு ராஜதந்திரியாகப்பார்த்தேன். அவரை ஒரு நகர நிர்மாண நிபுணராகவும் ஒரு பெரிய பொருளியல் நிபுணராகவும் பார்த்தேன். கூடவே அவர் மக்களின் தலைவர். மக்களுடன் மக்களாகக் கலக்கக்கூடியவர். பெண்களின் மானசீகக் காதலர்\
அதேசமயம் இத்தனைக்கும் அப்பால் அவர் நம்மால் புரிந்துகொள்ளமுடியாத ஒரு மனிதர். அல்லது அதற்குமேலே. அவரது அத்தனை செய்கைகளிலும் ஒரு புரிந்துகொள்ளமுடியாத நிலை இருக்கிறது. அவர் செய்வதில்லை. செய்யவைக்கிறார். எதையும் தானே பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை
கிருஷ்ணன் எவரையும் திருத்தி நல்வழிப்படுத்த முயலவில்லை. அவரவர் வழியில் அவரவர் கர்மநிலைக்கு ஏர்ப வாழ விட்டுவிட்டு அவர்களை வைத்து விளையாடிக்கொண்டும் இருக்கிறார்
ஆகவேதான் பாரதி தீராதவிளையாட்டுப்பிள்ளை என்று சொன்னார் என நினைக்கிறேன்
ஜெயராமன்