Thursday, April 2, 2015

பிரிதலின் கவிதை






ஜெ

வெண்முகில்நகரம் 59ல் வரும் கவித்துவம் சமீபகாலமாக உங்கள் எழுத்தில் நிகழ்ந்த உச்சம் என நினைக்கிறேன். கண்ணனை மலைப்பாம்பாக உருவகிக்கிறீர்கள். காலத்தை உண்டு அதைச்செரிக்கும்பொருட்டு அப்படியே கண்விழித்து தியானத்தில் ஆழ்ந்திருக்கிறான். அந்த படிமத்தின் மூர்க்கமும் அதேசமயம் serenity யும் அற்புதமான ஒரு மனநிலையை அளித்தன

எல்லாமே தனித்தனிக்கவிதைகள். பால் திரியும் கணம் என்ன என்று இல்லத்தரசிக்குத்தெரியும் என்பது. அசையும்பொருட்களின் கீலில்தான் முதலில் களிம்பு படிகிறது என்பது. நதி பிரியும் கணம் பற்றிய இடம். அனைத்துக்கும் மேலாக வற்றிய ஏரியின் டிசைனுக்கும் சிறுத்தையின் வரிகளுக்குமான அந்த உவமை. ஏரி வெடித்துப்பிரிகிறது. சிறுத்தை பிரிவுகளை இணைத்துக்கொண்டு வேட்டையாடுகிறது

முழுக்கமுழுக்க கவிதையான ஒரு அத்தியாயம்.

அருண்