Wednesday, April 8, 2015

யானைகளின் சண்டை



ஜெ

யானைகளின் சண்டைகளில் புற்களுக்கு தான் நஷ்டம் போல.

கனவுகளும் மிதத்தல் கொண்டதுமான ஒரு மேக வாழ்வை ப்ரேமையுடன் வாழ்ந்த பூரிசிரவஸ் இன்று தேவிகை நழுவ , விஜயை முறிந்து போக, எஞ்சி தளர்ந்து வீடு புக அங்கேயும் ஒரு கூடுஇன்றி தனித்து ஒதுங்கியது காட்டு தீயின் விரைவில் சட்டென்று எரிதல் தெரியாமல் காணமல் போகும் சிறு புல் அவனோ என பட்டது. ஒருவளின் நகர் உருவாக்கும் ஆசையும் ஆளும் வெறியும் பெரும் கல் என வீழ அதன் அதிர்வுகளில் உதிரும் ஒரு மரத்தின் இலை என அவனின் கனவுகள்.  உள்ளத்தின் காதல்கள் கண் முன்  நீராவி போல செல்வதை கண்டும் அவன் மலை புகாமல் உள்ளது அதிசயம். 

சொல்ல போனால் முதன் முதலாக ஒரு எளிய தேசத்தில் வெளி வரும் புதிய இளவரசன்.புதியவனின் ஏமாற்றங்கள், வேகங்கள், பின் வரும் சோர்வுகள், கற்றல்கள், களம் அரசவை என பல தேர்வுகள் என எல்லாம் வலியவை சார்ந்து திசை மாற்றபடுவதின் இயக்கங்கள் நன்கு வந்து கொண்டு இருக்கிறது

 எரிந்து போனாலும் எழுந்து பறக்க தவிக்கிறான் இந்த புதியவன்அம்பை போலவே கனவுகள் உதிர்த்து வெறியேறி தீ என ஆவானா இல்லை பின்புலம்  இல்லை என்பது புரிந்து இறுகி ஒடுங்கி துரியனுடன் கலப்பானா? 

லிங்கராஜ்