ஜெ,
பூரிசிரவஸின் மனம் செயல்படுவது ஒரு தளத்திலும் அவனுடைய ஆழ்மனசு செயல்படுவது வேறு தளத்திலும் இருக்கிறது. அவன் தர்க்கபூர்வமாகச் சிந்திக்கிறான். சிறப்பாக வாதாடுகிறான். எல்லாவற்றையுமே செய்கிறான். ஆனால் கனவுகளில் குழம்பித்தவிக்கிறான். ஒரு இடத்தில் இருக்கும்போது இன்னொரு இடத்தை கனவிலே காண்கிறான். ஒரு பெண்ணுடன் இருக்கும்போது இன்னொருத்தி வருகிறாள். இதுதான் அவனுடைய துக்கம் என்று தோன்றிக்கொண்டிருந்தது
இதற்குள்ளேயே ஒரு பெரிய தோல்விநாயகனாக அவன் தெரிந்துவிட்டான். ஒரு பெரிய டிராஜிக் கேரக்டர். அந்தகைய கதாபாத்திரங்கள் தங்களுடைய உள்முரண்பாடுகளால்தான் அழியும் என்பதுதான் கிளாஸிக்கல் விதி. அது வந்துவிடுகிறது. பார்ப்போம்.
ஆனால் இந்த மாதிரி டிராஜிக் கதாபாத்திரங்களைத்தான் நமக்குப்பிடித்திருக்கிறது. அவர்களுடன் தான் நாம் நம்மை அடையாளம் பண்ணிக்கொள்கிறோம். ஏனென்றே தெரிய்வில்லை. நமக்கு தோல்விகளிலிருந்துதான் பாடம் கற்கவேண்டியிருக்கிறது என்பதனால் இருக்கலாம்
சாமிநாதன்