Friday, April 3, 2015

திருதராஷ்டிரனின் விழிகள்

இன்றைய அத்தியாயத்தில் கிருஷ்ணன் பீஷ்மர் 
இடம் உரையாடும் காட்சி மிக முக்கியமான நிகழ்வை , இயல்பாக முன்னெடுத்து செல்வதாக அமைந்தது அருமை.  ஒவ்வொரு முறை த்ருடராஷ்டிரன் , பற்றி படிக்கும் போதும், இப்படியான ஒரு கதா பாத்திரம் எப்படி தம் மைந்தர்கள் போர் களத்தில் மடிவதை விரும்பும் என்ற கேள்வி ஆரம்பத்தில் இருந்து படிக்கும் அனைவருக்கும் திகைப்பையும், சந்தேகத்தையும் அளித்து வந்தது,  அதை யாதவ கிருஷ்ணன் வாயிலாக , தீர்த்து வைத்தது, ஜெமோ வின்" டச்" எனலாம்


 “இறுதியாக என்னை அமைதியிழக்கச்செய்தது நான் திருதராஷ்டிர மாமன்னரிடம் கண்ட மாற்றம். பிதாமகரே, பால் மோரென மாறத்தொடங்கும் முதற்கணம் எது என்று அஸ்வினிதேவர்கள் மட்டுமே அறிவர் என்று யாதவர் சொல்வதுண்டு. முதல் மணம் எழுவதை இல்லத்தரசி அறிவாள். நான் அந்த முதல்மணத்தை அறிந்துவிட்டேன். உண்மையில் அவரும் இன்னும் அதை அறியவில்லை. ஆனால் நதி திசைமாறிவிட்டது. பெருகப்பெருக விலகிச்செல்லும் விசை அது.”

இந்த வரிகளை மீண்டும் ஒரு முறை படித்தேன்.... சிலிர்ப்பு வாசிப்பு....

சௌந்தர் ராஜன்