Saturday, April 4, 2015

வெண்முரசில் நாய்கள்




குதிரை யானை போன்ற விலங்குகளின் குறிப்பு வெண்முரசில் நிறையவே வருகிறது. நாய்களை பற்றி வெண்முரசில் குறைவாகவே குறிப்புகள் வந்திருக்கிறது என்று தோன்றுகிறது. குறியீட்டு பாத்திரங்களாக அங்கங்கே நாய்கள் வந்திருக்கிறது. ஆனால் நடைமுறையில் நாய்கள் எப்படி பயன்பட்டது என்பது போல் வந்ததில்லை. குறிப்பாக காவல், ரானுவம், வேட்டை ஆகிய வேலைகளில். நாய்களின் பயன்பாடு நடைமுறையில் இப்போதை விட அந்த காலத்தில் அதிகமாக இருந்திருக்கலாம் என்ற எண்ணத்துடன் தோன்றிய கேள்வி இது. பிரயாகை வரை படித்திலிருந்து சொல்கிறேன். ஏதாவது இடங்களை தவறவிட்டிருக்கலாம்.

ஹரீஷ்

அன்புள்ள ஹரீஷ்

மகாபாரதத்தில் நாய்கள் வேட்டைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன. மந்தைக்காவலுக்குக்கூட நாய்கள் இருந்ததாகத் தெரியவில்லை. வேட்டைக்காரனுடன் மட்டுமே நாய்கள் உள்ளது குறிப்பிடப்படுகிறது.

பிரயாகையில் இடும்பவனத்தில் நாய்கள் வருகின்றன

ஜெ

குழுமத்தில்