Wednesday, April 8, 2015

வெண்முரசின் விமர்சகர்கள்




மதிப்புக்குரிய ஜெமோ அவர்க்ட்கு,

என்னை போல சிறிய வாசகனக்கும் மதிப்பு தந்து பதில் அளித்து இருப்பதற்கு நன்றி..

தங்களது "சலசலப்பு" கட்டுரை படித்த பிறகு எங்கே உங்கள் மனம் சலிப்பு கொண்டு விட்டதோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது .

வெண்முரசை வரிக்கு வரி படித்து இன்புற்று கொண்டே இருக்கிறேன்.

இதோ மணி இரவு  பதினொன்று ஆகி விட்டதுமணி பன்னிரெண்டு ஆனால் அடுத்த அத்தியாயம் படித்து விட்டு தூங்கலாம் என்று காத்து கொண்டு இருக்கிறேன்.

யார் என்ன எழுதினார்கள்ஒன்றும் தெரிய வில்லைஅதை தெரிந்து கொள்ளவும் துளியும் விருப்பம் இல்லை,ஆனால் என்னை போன்றே பலர் இதை படித்து ரசித்து கொண்டே இருக்கிறார்கள்...

ஒன்றுமே படிக்காமல் எழுதும் அவர்களை விடஉங்கள் எழுத்தை வரி வரியாகவார்த்தை வார்த்தையாக படித்து கொண்டு இருக்கும் எங்களை நினையுங்கள்.

நீங்கள் தீர்க்க தரிசனதில் நம்பிக்கை கொண்டவர் அல்ல என்பது எனக்கு தெரியும்ஆனால் ஒரு முப்பது வருடங்களுக்கு பிறகு இந்த நாவல் எப்படி வாசிக்க படும் என்று எனக்கு இப்பொழுதே புரிகிறது. மகாபார்ததில் வரும் அத்துணை உப கதாபாத்திரங்கள் (பாண்டு துரோணர்திருதுராஷிட்ரன்புரிசவரசுசாத்யாகிசல்லியன்,விதுரர் etc.,) உங்கள் நாவலை கொண்டே  புரிந்து கொள்ள படும். இவர்களில் எவராவது ஒருவர் வரலாற்று நாயகர்களாகவும் உருமாறவும் கூடும்.பல திரைபடங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இன் நாவலை  மையபடுத்தி எடுக்கபடும். 
  

காலவெளியில் இவர்கள் எல்லாம் கரைந்து கரைந்து போய் விடுவார்கள் ஆனால் வெண்முரசு வளர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் ஒரே ஒரு ஆபத்து தான் இருக்கிறது. கூடிய விரைவில் நீங்கள் “வெண்முரசு” மூலமாகவே வெளி உலகிற்கு அறிய படுவீர்கள். தங்களின் எல்லா நல்ல எழுத்துகளையும் இது விளூங்கி விடும்

என் எண்ணம் இவர்களை எல்லாம் நீங்கள் படிக்கவே கூடாது என்பது தான். நீங்கள் சலிப்பு அடைய வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இது மாதுரி எழுதி கொண்டு இருக்கிறார்கள். இதை மிக எளிதாக தாண்டி செல்வீர்கள் என்று என்று எனக்கு தெரியும், இருந்தும் இதை புலம்பலாகவே பதிவு செய்யுது உள்ளேன்.


ரகுராமன்

அன்புள்ள ரகுராமன்

சோர்வு அல்லது அவநம்பிக்கை என ஏதும் இல்லை. ஏனென்றால் இந்த எழுத்தின் வழியாக என்னை நான் கண்டடைவது எனக்கே தெரிகிறது

ஆனால் படைப்புநிலையில் சோர்வு தவிர்க்கமுடியாதது. அது இந்த நெசவின் ஊடுபாவுகளில் ஒன்று. உச்சம் நோக்கிச் சென்றதுமே வீழ்ச்சியும் சலிப்பும். மீண்டும் உச்சம், இதுதான் எழுத்தின் வழி

ஜெ